திருப்பலி முன்னுரை
02ஆம் வாரம் – ஞாயிறு - மூன்றாம் ஆண்டு
திருப்பலி முன்னுரை
இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே,
இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.
இன்றைய நற்செய்தியில் கானாவூரில் இயேசுகிறிஸ்து தன் முதல் அரும்அடையாளத்தை நிகழ்த்தியதை காண்கிறோம். அன்னைமரி திருமண வீட்டில் திராட்சை இரசம் தீர்ந்ததும், தன் மகனிடம் “இரசம் தீர்ந்து விட்டது” எனக் கூறியபோது, “எனது நேரம் இன்னும் வரவில்லையே” என இறைமகன்; தயங்கினாலும், தன் மகனால் ஏதேனும் செய்ய இயலும் என்பதை உணர்ந்த அன்னைமரி, “ அவர் n;சால்வதையெல்லாம் செய்யுங்கள்” என்று கூறுகின்றார். இறைமகனும் அற்புதத்தை நிகழ்த்துகின்றார். இறையாட்சி இத்தரணியிலே தழைத்தோங்கிட தன் வாழ்வையே தாரை வார்த்திட்ட அன்னைமரியே இறைமகனின் முதல் அரும்அடையாளம் வெளிப்படக் காரணமாக, தூண்டுகோலாக, உந்துசக்தியாக இருக்கின்றார். பேதுருவும், யோவானும் கல்வியறிவு அற்றவர்களே. ஆனால், அவர்களால் துணிவுடன் போதிக்க முடிந்தது, காரணம், இறைமகன் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு உந்துசக்தியாக, தூண்டுதலாக இருந்தார்.
நம் குழந்தைகளிடம், நண்பர்களிடம், நம் உறவுகளிடம் பல திறமைகள், ஆற்றல்கள் ஒளிந்திருக்கும். அதை அவர்கள் வெளிப்படுத்தத் தயங்கலாம். நாம் அதை உணர்ந்தவர்களாக, அவர்களின் திறமைகள், அறிவாற்றலை வெளிக் கொணர தூண்டுதலாக, உந்துசக்தியாக திகழ்ந்திட வேண்டும். விளக்கில் திரி எரிந்து பிரகாசிக்க வேண்டுமானால்; ஒரு தூண்டல் இருக்க வேண்டும். நம்முடன் இருப்பவர்களின் வாழ்வு பிரகாசமாய் ஜொலித்திட, நாம் நம் மனதில் எந்தவித பொறாமையும், தன்னலமும் அற்றவர்களாக, அவர்களின் வாழ்வு ஏற்றம் கண்டிட அவர்களுக்கு நல்ல தூண்டுதல் சக்தியாக, ஊக்கமூட்டுவர்களாக வாழ்ந்திட, வரம் வேண்டி இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம்.
மன்றாட்டுக்கள்:
தாயும், தந்தையுமான இறைவா,
உம் பணிக்காய் நீர் தேர்ந்தெடுத்து, அர்சித்தி;ட்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட் சகோதரிகள். துறவறத்தார் அனைவரும், தங்கள் பணிவாழ்வில் உமதன்;பு வாழ்வை, வார்த்தையாக இல்லாமல் வாழ்வாக பிரதிபலித்து, முன்மாதிரியான சாட்சிய வாழ்வு வாழந்து, மக்களை நல்வழியில் வழிநடத்தி, இறையாட்சியை எங்கும் வளரச் செய்திட, தூய ஆவியின்; ஆற்றலையும், வல்லமையையும் நிறைவாகப் பொழிந்து, காத்திட வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
அரணும், கோட்டையுமான இறைவா,
எங்கள் வாழ்வில் வரும் துன்பங்கள், துயரங்கள், சோதனைகளைக் கண்டு, மனம் சோர்ந்து, தளர்ந்து, வாழ்வை முடித்துக் கொள்ளும் கோழைத்தனமான, முட்டாள்தனமான முடிவுகளை எங்கள் மனதிலிருந்து அகற்றி, நீர் எங்களோடு என்றும் உடனிருக்கின்றீர், பயணிக்கின்றீர், எங்கள் வாழ்வை வளமாக்குவீர் என்ற ஆழமான விசுவாசத்தை, நம்பிக்கைளை நாங்கள் பெற்று, வாழ்வின் பயணத்தை உம் கரம் பிடித்து, நடந்திடக் கூடிய உறுதியான உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
உலகின் ஒளியே இறைவா,
வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். இந்த உலகம் காட்டும் மாயக் கவர்ச்சியான பணம், பதவி, புகழ், மது, மாது என்ற போதையில் தங்கள் வாழ்வை தொலைத்திடாது. தடம் புரண்டிடாது, உண்மை இறைவன் உம்மை விட்டு விலகி, பாவத்திலே வீழ்ந்திடாது, இருளின் ஆட்சிக்குரிய தவறான செயல்களிலிருந்து விடுபட்டு, ஒளியின்; ஆட்சிக்குரிய செயல்களை உணர்ந்து, அதன் வழியில் தங்கள் வாழ்வைத் தொடர்ந்திடக் கூடிய தெளிவான மனதினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
வாழ்வு வழங்கும் வள்ளலே இறைவா,
அன்று வயது முதிர்ந்த சாரா, அன்னா, எலிசபெத் இவர்களின் கண்ணீரின் வேண்டுதல்களை ஏறெடுத்து, அவர்களுக்கு மக்கட்பேற்றினை அளித்தீரே, இன்று திருமணமாகி பல ஆண்டுகள் கடந்து, குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கித் தவிக்கும் தம்பதியரின் வேண்டுதல்களை கண்ணோக்கிப் பாரும். அவர்களின் கண்ணீரை கண்ணுற்று, அவர்களுக்கு நல்ல மக்கட்பேற்றினை அளித்து, அவர்கள் அக்குழந்தையை உமக்கும், இச்சமூகத்திற்கும் உகந்தவர்களாக வளர்த்து ஆளாக்கிடக் கூடிய, பொறுப்புள்ள பெற்றோர்களாக வாழந்திட வரமருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
இரக்கத்தின் ஊற்றே இறைவா.
வறுமை, ஏழ்மையினால் துயருறும் மக்களுக்கு, அவர்களின் தேவைகளையறிந்து, உதவிடவும், எங்களிடம் இருப்பதை, இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், விபத்து, ஆபத்துக்களில் சிக்கித் தவிப்பவர்களை கண்டும் காணாததுபோல், “நமக்கேன் வம்பு” என விலகிச் செல்லாமல், நல்ல சமாரியனைப் போல் உடனிருந்து உதவிடவும், அநீதிகளைக் கண்டு, தட்டிக் கேட்காமல், கோழைத்தனமாக வாழாது, தவற்றினைச் சுட்டிக் காட்டி, நீதியை நிலைநாட்டவும் கூடிய, துணிவு நிறைந்த உள்ளத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.