ஆண்டவரைப் போற்றுதல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1இரவு நேரங்களில்

ஆண்டவரின் இல்லத்தில்

பணி செய்யும்

ஆண்டவரின் ஊழியரே!

நீங்கள் அனைவரும்

ஆண்டவரைப் போற்றுங்கள்.

2தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி

ஆண்டவரைப் போற்றுங்கள்.

3விண்ணையும் மண்ணையும்

உண்டாக்கிய ஆண்டவர்

சீயோனிலிருந்து

உங்களுக்கு ஆசி வழங்குவாராக!