பழைய ஏற்பாடு
1சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது
எத்துணை நன்று,
எத்துணை இனியது!
2அது ஆரோனின் தலையினிலே
ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம்
அவருடைய தாடியினின்று வழிந்தோடி
அவர்தம் அங்கியின் விளிம்பை
நனைப்பதற்கு ஒப்பாகும்.
3அது எர்மோனின் மலைப்பனி
சீயோனின் மலைகள்மேல்
இறங்குவதற்கு ஒப்பாகும்;
ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள
வாழ்வென்னும் ஆசிதனை
ஆண்டவர் பொழிந்தருள்வார்.