ஆண்டவர் போற்றி!

1பிற இனத்தாரே!

நீங்கள் அனைவரும்

ஆண்டவரைப் போற்றுங்கள்!

மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும்

அவரைப் புகழுங்கள்!

2ஏனெனில், ஆண்டவர்

நமக்குக் காட்டும் மாறாத அன்பு

மிகப்பெரியது;

அவரது உண்மை

என்றென்றும் நிலைத்துள்ளது.

அல்லேலூயா!


117:1 உரோ 15:11.