கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்

1பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்:

2ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன;

அமைதியை உன்னதங்களில்

அவரே நிலைநாட்டுவார்.

3அளவிட முடியுமா அவர்தம் படைகளை?

எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?

4அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன்

நேரியவராய் இருக்க முடியும்? அல்லது

பெண்ணிடம் பிறந்தவர்

எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?

5இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே!

விண்மீனும் அவர்தம் பார்வையில்
தூய்மையற்றதே!

6அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர்

எத்துணைத் தாழ்ந்தவர்!

பூச்சி போன்ற மானிடர்

எவ்வளவு குறைந்தவர்!