நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு
(திபா 42 இன் தொடர்ச்சி)

1கடவுளே, என் நேர்மையை
நிலைநாட்டும்;

இறைப்பற்றில்லா இனத்தோடு

என் வழக்குக்காக வாதிடும்;

வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த

மனிதர் கையினின்று

என்னை விடுவித்தருளும்.

2ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்;

ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்?

எதிரியால் ஒடுக்கப்பட்டு,

நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?

3உம் ஒளியையும் உண்மையையும்

அனுப்பியருளும்;

அவை என்னை வழி நடத்தி,

உமது திருமலைக்கும்

உமது உறைவிடத்திற்கும்

கொண்டுபோய்ச் சேர்க்கும்.

4அப்பொழுது, நான்

கடவுளின் பீடம் செல்வேன்;

என் மன மகிழ்ச்சியாகிய

இறைவனிடம் செல்வேன்;

கடவுளே! என் கடவுளே!

யாழிசைத்து ஆர்ப்பரித்து

உம்மைப் புகழ்ந்திடுவேன்.

5என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?

நீ கலக்கமுறுவது ஏன்?

கடவுளையே நம்பியிரு;

என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு

இன்னும் நான் அவருக்கு

நன்றி செலுத்துவேன்.


43 திபா 42இன் தொடர்ச்சி.