பணிவுமிகு மன்றாட்டு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்: தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரே! என் உள்ளத்தில்

இறுமாப்பு இல்லை!

என் பார்வையில் செருக்கு இல்லை;

எனக்கு மிஞ்சின அரிய, பெரிய,

செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.

2மாறாக, என் நெஞ்சம்

நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது;

தாய்மடி தவழும் குழந்தையென

என் நெஞ்சம் என்னகத்தே

அமைதியாயுள்ளது.

3இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும்

ஆண்டவரையே நம்பியிரு!