மோசே தோற்கடித்திருந்த அரசர்கள்

1யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே;
2எமோரிய மன்னன் சீகோன் எஸ்போனில் வாழ்ந்தான். அவன் அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையிருக்கும் அராயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் கிலயாதின் பகுதிவரையிலும் அம்மோனியரின் எல்லையான யப்போக்குப் பள்ளத்தாக்குவரையிலும்
3அராபாவிலிருந்து கிழக்கே கினரோத்துக் கடல்வரையிலும் உப்புக்கடலான அராபா கடல்வரையிலும், கிழக்கு நோக்கி பெத்தசிமோத்து வரையிலும், தெற்கில் பிஸ்கா மலைச்சரிவு வரையிலும் அரசாண்டான்.
4இரபாயியருள் எஞ்சி இருந்தவனும் பாசானின் மன்னனுமான ஓகின் எல்லை இதுவே; அவன் அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வாழ்ந்தான்.
5எர்மோன்மலை, சல்காமலை, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைவரையிலும் எஸ்போன் மன்னன் சீகோனின் எல்லையான கிலயாதின் பாதிவரையிலும் ஆண்டான்.
6ஆண்டவரின் ஊழியரான மோசேயும் இஸ்ரயேலரும் அவர்களைத் தோற்கடித்தனர். ஆண்டவரின் ஊழியரான மோசே அதை ரூபனுக்கும் காத்துக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உரிமையாகக் கொடுத்தார்.

யோசுவா தோற்கடித்த மன்னர்கள்

7யோசுவாவும் இஸ்ரயேலரும் கைப்பற்றிய நாடுகளின் மன்னர்கள் இவர்களே. யோர்தானுக்கு மேற்கே பாகால்காதில் லெபனோன் பள்ளத்தாக்கிலிருந்து சேயிர்பக்கம் செல்லும் ஆலாக்கு மலைவரை இருந்த மன்னர்களின் நாட்டை யோசுவா இஸ்ரயேலருக்கு அவர்களின் குலப்பிரிவின்படி உடைமையாக அளித்தார்.
8மலைச்சரிவு, பள்ளத்தாக்கு, அராபா மலைச்சரிவு, பாலைநிலம், நெகேபு, இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரின் நாடுகள்.
9எரிகோ மன்னன் ஒருவன்; பெத்தேலுக்கு அருகில் இருந்த ஆயி மன்னன் ஒருவன்.
10எருசலேம் மன்னன் ஒருவன்; எபிரோன் மன்னன் ஒருவன்,
11யார்முத்து மன்னன் ஒருவன்; இலாக்கிசு மன்னன் ஒருவன்.
12எக்லோன் மன்னன் ஒருவன்; கெசேர் மன்னன் ஒருவன்.
13தெபீர் மன்னன் ஒருவன்; கெதேர் மன்னன் ஒருவன்.
14ஒர்மா மன்னன் ஒருவன்; அராது மன்னன் ஒருவன்.
15லிப்னா மன்னன் ஒருவன்; அதுல்லாம் மன்னன் ஒருவன்.
16மக்கேதா மன்னன் ஒருவன்; பெத்தேல் மன்னன் ஒருவன்.
17தப்புவாகு மன்னன் ஒருவன்; ஏபேர் மன்னன் ஒருவன்.
18அப்பேக்கு மன்னன் ஒருவன்; இலாசரோன் மன்னன் ஒருவன்.
19மாதோன் மன்னன் ஒருவன்; ஆட்சோர் மன்னன் ஒருவன்.
20சிம்ரோன் மெரோன் மன்னன் ஒருவன்; அக்சாபு மன்னன் ஒருவன்.
21தானாக்கு மன்னன் ஒருவன்; மெகிதோ மன்னன் ஒருவன்.
22கெதேசு மன்னன் ஒருவன்; யோக்னயாம் கர்மேல் மன்னன் ஒருவன்.
23நாபோத்தோரில் இருந்த தோர் மன்னன் ஒருவன்; கில்காலில் ஒருந்தகோயிம் மன்னன் ஒருவன்.
24திர்சா மன்னன் ஒருவன்; ஆக மொத்தம் முப்பத்தொரு மன்னர்கள்.

12:1-5 எண் 21:21-35; இச 2:26; 3:11. 12:6 எண் 32:33; இச 3:12.