மலாக்கி முன்னுரை


மலாக்கி என்னும் இறைவாக்கு நூல் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எருசலேம் கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதற்குப் பின் தோன்றியது. குருக்களும் மக்களும் சமயக் கடமைகளில் தவறினர். அவர்கள் ஆண்டவருக்குச் சேர வேண்டிய காணிக்கையை முறைப்படிச் செலுத்தவில்லை; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்தனர்; அவரது திருப்பெயரைக் களங்கப்படுத்தினர். எனவே ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்பதே இந்நூலின் செய்தியாகும்.

நூலின் பிரிவுகள்

  1. இஸ்ரயேலரின் குற்றங்கள் 1:1 - 2:16
  2. கடவுளின் தண்டனைத் தீர்ப்பும் இரக்கமும் 2:17 - 3:23