‛புலம்பல்’ என்னும் இத்திருநூல் ஐந்து எபிரேய அகர வரிசைக் கவிதைகளால் ஆனது. கி.மு. 586இல் எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவையும், அதன் தொடர் நிகழ்ச்சியான நாடுகடத்தப்படுதலையும் பற்றிய புலம்பலாக இந்நூல் அமைந்துள்ளது.
எரேமியாவின் காலச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்நூலில், அவலச்சுவையே மேலோங்கி நிற்கின்றது. ஆயினும், கடவுளின் அருளினால் கிடைக்கவிருக்கும் ஒளிமயமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் ஆங்காங்கே வெளிப்படுகின்றது. இக்கவிதைகள், மேற்குறிப்பிட்ட பேரழிவின் நினைவு நாளுக்கான நோன்பு வழிபாட்டில், யூதர்களால் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுகின்றன.