1“கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட,
அவள் அவனை விட்டகன்று
வேறு ஒருவனோடு வாழ்கையில்,
அக்கணவன் அவளிடம்
மீண்டும் திரும்பிச் செல்வானா?
அந்நாடு தீட்டுப்படுவது உறுதியல்லவா?
நீ பல காதலர்களோடு
விபசாரம் செய்தாய்;
உன்னால் என்னிடம் திரும்பிவர
முடியுமா?” என்கிறார் ஆண்டவர்.
2உன் கண்களை உயர்த்தி
மொட்டை மேடுகளைப்பார்;
நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ?
பாலை நிலத்தில் அராபியனைப்போல,
பாதையோரங்களில் நீயும்
காதலர்களுக்காகக் காத்திருந்தாய்;
உன் விபசாரங்களாலும்
தீச்செயல்களாலும்
நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.
3ஆகையால், நாட்டில்
மழை பெய்யாது நின்று விட்டது;
இளவேனிற் கால மழையும் வரவில்லை;
உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி;
நீ மானங்கெட்டவள்.
4இப்போது கூட ‘என் தந்தையே!
என் இளமையின் நண்பரே!’ என
என்னை நீ அழைக்கவில்லையா?
5‘என்றென்றும் அவர்
சினம் அடைவாரோ?
இறுதிவரை அவர்
சினம் கொண்டிருப்பாரோ?’ என்கிறாய்.
இவ்வாறு சொல்லிவிட்டு
உன்னால் இயன்றவரை
தீச்செயல்களையே செய்கிறாய்.
நம்பிக்கையற்ற இஸ்ரயேலே,
என்னிடம் திரும்பிவா,
என்கிறார் ஆண்டவர்.
நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்;
ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன்,
என்கிறார் ஆண்டவர்.
நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.
13உன் குற்றத்தை
நீ ஏற்றுக்கொண்டால் போதும்;
உன் கடவுளாகிய ஆண்டவருக்கு
எதிராகக் கலகம் செய்தாய்;
பசுமையான மரங்கள்
அனைத்தின் கீழும்
அன்னியரை நாடி
அங்குமிங்கும் ஓடினாய்;
என் குரலுக்கோ
நீ செவிசாய்க்கவில்லை,
என்கிறார் ஆண்டவர்.
14மக்களே! என்னிடம்
திரும்பி வாருங்கள்; ஏனெனில்,
நானே உங்கள் தலைவன்;
நகருக்கு ஒருவனையும்
குடும்பத்திற்கு இருவரையுமாகத்
தெரிந்தெடுத்து உங்களைச்
சீயோனுக்குக் கூட்டி வருவேன்.
19உன்னை என் மக்களின் வரிசையிலே
எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும்
திரளான மக்களினங்களுக்கிடையே
அழகான உரிமைச்சொத்தாகிய
இனிய நாட்டை உனக்கு
எவ்விதம் தருவேன் என்றும்
எண்ணிக்கொண்டிருந்தேன்.
‘என் தந்தை’ என
என்னை அழைப்பாய் என்றும்,
என்னிடமிருந்து
விலகிச் செல்லமாட்டாய் என்றும்
எண்ணியிருந்தேன்.
20நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண்
தன் காதலனைக் கைவிடுவது போல,
இஸ்ரயேல் வீடே! நீயும் எனக்கு
நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய்,
என்கிறார் ஆண்டவர்.
21மொட்டை மேடுகளில்
கூக்குரல் கேட்கிறது;
அது இஸ்ரயேல் மக்களின்
அழுகையும் வேண்டலுமாம்;
ஏனெனில், அவர்கள் நெறிதவறித்
தங்கள் கடவுளாகிய ஆண்டவரை
மறந்தார்கள்.
22என்னைவிட்டு விலகிய மக்களே!
திரும்பி வாருங்கள்;
உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து
உங்களைக் குணமாக்குவேன்;
“இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம்.
நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
23குன்றுகளிலிருந்தும் மலைகளில்
செய்யப்படும் அமளிகளிலிருந்தும்
கிடைப்பது ஏமாற்றமே;
இஸ்ரயேலின் விடுதலை
எங்கள் கடவுளாகிய
ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது.