தூயகத்தில் இறைவன் போற்றி!

1அல்லேலூயா! தூயகத்தில்

இறைவனைப் போற்றுங்கள்!

வலிமைமிகு விண்விரிவில்

அவரைப் போற்றுங்கள்!

2அவர்தம் வல்ல செயல்களுக்காய்

அவரைப் போற்றுங்கள்!

அவர்தம் எல்லையிலா

மாண்பினைக் குறித்து

அவரைப் போற்றுங்கள்!

3எக்காளம் முழங்கியே

அவரைப் போற்றுங்கள்!

வீணையுடன் யாழிசைத்து

அவரைப் போற்றுங்கள்.

4மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து

அவரைப் போற்றுங்கள்!

யாழினை மீட்டி,

குழலினை ஊதி

அவரைப் போற்றுங்கள்!

5சிலம்பிடும் சதங்கையுடன்

அவரைப் போற்றுங்கள்!

‛கலீர்’ எனும் தாளத்துடன்

அவரைப் போற்றுங்கள்!

6அனைத்து உயிர்களே,

ஆண்டவரைப் புகழ்ந்திடுக!

அல்லேலூயா!