2 குறிப்பேடு முன்னுரை


‘இரண்டாம் குறிப்பேடு’ என்னும் இந்நூல் ‘முதலாம் குறிப்பேட்டின்’ தொடர்ச்சியாகும். இதன் முதற் பகுதி சாலமோனது ஆட்சியின் தொடக்கம் முதல் அவரது இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறது. இரண்டாம் பகுதி அரசர் சாலமோனின் மகனும் அவருக்குப்பின் வந்தவனுமான ரெகபெயாமுக்கு எதிராக எரொபவாமின் தலைமையில் வடநாட்டுக் குலங்கள் கிளர்ந்தெழுந்ததை விளக்குகிறது. மூன்றாம் பகுதி எருசலேம் வீழ்ச்சியுற்ற கி.மு. 586 வரையிலான தென்னாட்டுக் குலங்கள் பற்றிய வரலாற்றைக் கொண்டுள்ளது.

நூலின் பிரிவுகள்

 1. சாலமோனின் ஆட்சி 1:1 - 9:31
   அ) முற்பகுதி 1:1 - 17
   ஆ) கோவில் கட்டப்படல் 2:1 - 7:10
   இ) பிற்பகுதி 7:11 - 9:31
 2. வட நாட்டுக் குலங்களின் கலகம் 10:1 - 19
 3. யூதாவின் அரசர்கள் 11:1 - 36:12
 4. எருசலேமின் வீழ்ச்சி 36:13 - 23