பென்யமினின் வழிமரபினர்

1பென்யமினுக்குப் பிறந்தோர்; தலைமகன் பேலா, இரண்டாமவர் அஸ்பேல், மூன்றாமவர் அகிராகு,
2நான்காமவர் நோகா, ஐந்தாமவர் இராப்பா.
3பேலாவுக்கு இருந்த புதல்வர்: அதார், கேரா, அபிகூது,
4அபிசூவா, நாகமான், அகோகு,
5கேரா, செபுவான், ஊராம்.
6ஏகூதின் புதல்வர்: அவர்கள் மானகாத்திற்கு நாடு கடத்தப்பட்ட கெபாலின் குடிகளின் மூதாதை வீட்டுக்குத் தலைவர்கள்;
7நாகமான், அகியா, கேரா என்ற எக்லாம். அவர் உசாவையும் அகிகூதையும் பெற்றார்.
8சகரயிம், தம் மனைவியர் கூசீம், பாரா என்பவர்களைத் தள்ளிவைத்தபின், மோவாபு நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தனர்.
9ஓதேசு என்னும் மனைவிமூலம் அவர் பெற்ற புதல்வர்கள்; யோபாப், சிபியா, மேசா, மல்காம்.
10எயூசு, சாக்கியா, மிர்மா. மூதாதையரின் வீட்டுத் தலைவர்களான இவர்கள் அவரின் புதல்வர்.
11ஊசிம் மூலம் அவர் அபிதூபையும் எல்பாகாலையும் பெற்றார்.
12எல்பாகாலின் புதல்வர்: ஏபேர், மிஸ்யாம், சாமேது. அவர் ஓனோ, லோது மற்றும் அதன் சிற்றூர்களையும் கட்டி எழுப்பினார்.

அய்யலோன் மற்றும் காத்துப் பகுதிகளில் வாழ்ந்த பென்யமினியர்

13பெரியாவும் செமாவும் அய்யலோன் குடிகளின் மூதாதையர் வீட்டுத் தலைவராய் இருந்தனர். அவர்கள் காத்தின் குடிகளைத் துரத்தியடித்தனர்.
14அகியோ, சாசாக்கு, எரேமோத்து,
15செபதியா, அராது, ஏதேர்,
16மிக்கேல், இஸ்பா, யோகா என்போர் பெரியாவின் புதல்வர்.

எருசலேமில் வாழ்ந்த பென்யமினியர்

17செபதியா, மெசுல்லாம், இசுக்கி, எபேர்,
18இஸ்மராய், இஸ்லியா, யோபாபு என்போர் எல்பாகாலின் புதல்வர்.
19யாக்கிம், சிக்ரி, சப்தி,
20எலியேனாய், சில்தாய், எலியேல்,
21அதாயா, பெராயா, சிம்ராது என்போர் சிமயியின் புதல்வர்.
22இஸ்பான், ஏபேர், எலியேல்,
23அப்தோன், சிக்ரி, ஆனான்,
24அனனியா, ஏலாம், அன்தோதியா,
25இப்தியா, பெனுவேல் என்போர் சாசாக்கின் புதல்வர்.
26சம்சராய், செகரியா, அத்தலியா,
27யகரேசியா, எலியா, சிக்ரி என்போர் எரொகாமின் புதல்வர்.
28இவர்கள் தங்கள் தலைமுறைகளில் மூதாதையர் வீட்டுத் தலைவர்களுள் முதல்வராய் இருந்தனர். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

கிபயோன் மற்றும் எருசலேமில் வாழ்ந்த பென்யமினியர்

29கிபயோனில் வாழ்ந்த கிபயோனியரின் மூதாதை எயியேல். அவரின் மனைவி பெயர் மாக்கா.
30அவரின் தலைமகன் அப்தோன்; மற்றவர்கள்; சூர், கீசு, பாகால், நாதாபு,
31கெதோர், அகியோ, செகேர்,
32மிக்லோத்து; இவருக்குச் சிமயா பிறந்தார். அவர்களின் வழிமரபினர் தங்கள் உறவின் முறையாருடன் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

அரசர் சவுலின் குடும்பத்தினர்

33நேருக்குக் கீசு பிறந்தார். கீசுக்குச் சவுல் பிறந்தார் சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.
34யோனத்தானின் மகன் மெரிபுபாகால், மெரிபுபாகாலுக்கு மீக்கா பிறந்தார்.
35மீக்காவின் புதல்வர்: பித்தோன், மெலேக்கு, தாரேயா, ஆகாசு.
36ஆகாசுக்கு யோயாதா பிறந்தார்; யோயாதாவுக்குப் பிறந்தோர்; ஆலமேத்து, அஸ்மாவேத்து, சிம்ரி. சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.
37மோட்சாவுக்குப் பினியா பிறந்தார். அவர் மகன் இராப்பா; அவர் மகன் எலயாசர்; அவர் மகன் ஆட்சேல்.
38ஆட்சேலுக்கு ஆறு புதல்வர் இருந்தனர். அவர்களின் பெயர்களாவன; அஸ்ரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயரியா, ஒபதியா, ஆனான். இவர்கள் அனைவரும் ஆட்சேலின் புதல்வர்கள்.
39அவர் சகோதரரான ஏசேக்கின் புதல்வர்: தலைமகன் ஊலாம், இரண்டாமவர் எயூசு, மூன்றாமவன் எலிப்பலேற்று.
40ஊலாமின் புதல்வர்கள் ஆற்றல்மிகு வீரர்களாயும், வில்வல்லோர்களாயும் இருந்தனர். அவர்களுக்குப் பல பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாய் மொத்தம் நூற்று ஐம்பது பேர் இருந்தனர். இவர்கள் யாவரும் பென்யமின் புதல்வர்கள்.