யூதாவின் வழிமரபினர்
1இஸ்ரயேலின் மைந்தர்; ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2தாண், யோசேப்பு, பென்யமின், நப்தலி, காத்து, ஆசேர்.
3யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, இம்மூவரும் கானானியப் பெண் பத்சூவாவிடம் அவருக்குப் பிறந்தவர்கள். அவர்களில் யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவரின் பார்வையில் தீயவனாய் இருந்ததால் அவர் அவனைச் சாகடித்தார்.
4யூதாவின் மருமகள் தாமார் அவருக்குப் பெற்ற புதல்வர்: பேரேட்சு, செராகு; யூதாவின் புதல்வர் மொத்தம் ஐந்து பேர்.
5பெரேட்சின் புதல்வர்: எட்சரோன், ஆமூல்.
6செராகின் புதல்வர்: சிமிரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா, ஆக மொத்தம் ஐந்து பேர்.
7விலக்கப்பட்டதை வைத்துக் கொண்டதால் தவறிழைத்து இஸ்ரயேலருக்குப் பெருங்கேடு விளைவித்த ஆக்கார்* கர்மியின் புதல்வருள் ஒருவன்.
8ஏத்தானின் மகன் அசரியா.
அரசர் தாவீதின் மூதாதையர்
9எட்சரோனுக்குப் பிறந்த புதல்வர்: எரகுமவேல், இராம், கெலூபாய்.
10இராமுக்கு அம்மினதாபு பிறந்தார், அம்மினதாபுக்கு யூதா மக்களின் தலைவராகிய நகசோன் பிறந்தார்.
11நகசோனுக்கு சல்மா பிறந்தார்: சல்மாவுக்குப் போவாசு பிறந்தார்.
12போவாசுக்குப் ஒபேது பிறந்தார்: ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.
13ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: தலைமகன் எவியாபு, இரண்டாம் மகன் அபினதாபு, மூன்றாம் மகன் சிமயா.
14நான்காம் மகன் நெத்தனியேல், ஐந்தாம் மகன் இரதாய்,
15ஆறாம் மகன் ஒட்சேம், ஏழாம் மகன் தாவீது.
16இவர்களின் சகோதரரிகள்; செரூயா, அபிகாயில். செருயாவின் புதல்வர்: அபிசாய், யோவாப், அசாயேல் என்னும் மூவர்.
17அபிகாயில் இஸ்மயேலராகிய எத்தேருக்கு அமாசாவைப் பெற்றெடுத்தார்.
எட்சரோனின் வழிமரபினர்
18எட்சரோனின் மகன் காலேபுக்கு தம் மனைவி எரியோதைச் சார்ந்த அசூபா மூலம் பிறந்த புதல்வர் இவர்களே: ஏசேர், சோபாபு, அர்தோன்.
19அசூபா இறந்தபோது, காலேபு எப்ராத்தை மணந்து கொண்டார்; அவர் அவருக்குக் கூரைப் பெற்றெடுத்தார்.
20கூருக்கு ஊரி பிறந்தார். ஊரிக்கு பெட்சலயேல் பிறந்தார்.
21பின்பு, எட்சரோன் தமக்கு அறுபது வயதானபோது கிலயாதின் மூதாதையான மாக்கிரின் புதல்வியை மணந்து அவருடன் உறவு கொண்டார். அவர் அவருக்குச் செகூபைப் பெற்றெடுத்தார்.
22செகூபுக்கு யாயிர் பிறந்தார். இவருக்கு கிலயாது நாட்டில் இருபத்து மூன்று நகர்கள் இருந்தன.
23கெசூரும் ஆராமும் அவர்களிடமிருந்து அவ்வோத்யாயிரையும் கெனாத்திலுள்ள சிற்றூர்களையும் சேர்த்து மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினார்கள். இவை யாவும் கிலயாதின் மூதாதையாகிய மாக்கிரின் புதல்வர்களுக்கு உரியவை.
24எட்சரொன் எப்ராத்தாவில் இறந்தபின், அவர் மனைவி அபியா காலேபுக்கு தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூரைப் பெற்றெடுத்தாள்.
எரகுமவேலின் வழிமரபினர்
25எட்சரோனின் தலைமகனான எரகுமவேலின் மைந்தர்; தலைமகன் இராம் மற்றும் பூனா, ஒரேன், ஒட்சேம், அகியா.
26எரகுமவேலுக்கு அத்தாரா என்ற மற்றொரு மனைவி இருந்தார். அவரே ஒனாமின் தாய்.
27எரகுமவேலின் தலை மகனான இராமின் புதல்வர்: மாகாசு, யாமின், ஏக்கேர்.
28ஓனாமின் புதல்வர்: சம்மாய், யாதா; சம்மாயின் புதல்வர்: நாதாபு, அபிசூர்.
29அபிசூரின் மனைவியின் பெயர் அபிகாயில்; அவர் அவருக்கு அக்பானையும் மோலிதையும் பெற்றெடுத்தார்.
30நாதாபின் புதல்வர்: செலேது, அப்பயிம்; செலேது புதல்வரின்றி இறந்தார்.
31அப்பயிம் புதல்வர், இசி; இசியின் புதல்வர், சேசான்; சேசானின் புதல்வருள் அக்லாய் ஒருவர்.
32சம்மாயின் சகோதரரான யாதாவின் புதல்வர்: எத்தேர், யோனத்தான். எத்தேர் புதல்வரின்றி இறந்தார்.
33யோனத்தானின் புதல்வர்: பெலேத்து, சாசா; இவர்கள் எரகுமவேலின் வழிமரபினர்.
34சேசானுக்கு புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டுமே இருந்தனர். சேசானுக்கு யார்கா என்ற எகிப்தியப் பணியாளர் ஒருவர் இருந்தார்.
35சேசான் தம் புதல்வியருள் ஒருவரை யார்கா என்ற தம் பணியாளருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர் அவருக்கு அத்தாயைப் பெற்றெடுத்தார்.
36அத்தாய்க்கு நாத்தான் பிறந்தார்; நாத்தானுக்குப் சாபாத்து பிறந்தார்.
37சாபாத்துக்கு எப்லால் பிறந்தார்; எப்லாலுக்கு ஓபேது பிறந்தார்.
38ஓபேதுக்கு ஏகூ பிறந்தார். ஏகூவுக்கு அசரியா பிறந்தார்.
39அசரியாவுக்கு ஏலேசு பிறந்தார்; ஏலேசுக்கு எலயாசா பிறந்தார்.
40எலியாசாவுக்குச் சிஸ்மாய் பிறந்தார்; சிஸ்மாய்க்குச் சல்லூம் பிறந்தார்.
41சல்லூமுக்கு எக்கமியா பிறந்தார்; எக்கமியாவுக்கு எலிசாமா பிறந்தார்.
காலேபின் பிறவழிமரபினர்
42எரகுமவேலின் சகோதரரான காலேபின் மைந்தர்; தலைமகன் மேசா; இவர் சீபின் தந்தை; இவர் எப்ரோனின் தந்தையாகிய மாரேசாவின் புதல்வர்.
43எப்ரோனின் புதல்வர்: கோராகு, தப்புவாகு, இரக்கேம், செமா.
44செமாவுக்கு இரகாம் பிறந்தார்; இவர் யோர்க்கயாமின் தந்தை. இரக்கேமுக்கு சம்மாய் பிறந்தார்.
45சம்மாயின் புதல்வர்: மாகோன்; மாகோன் பெத்சூரின் தந்தை.
46காலேபின் மறுமனைவி ஏப்பா ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றெடுத்தார்; ஆரானுக்குக் காசேஸ் பிறந்தார்.
47யக்தாயின் புதல்வர்: இரகேம், யோத்தாம், கேசான், பெலேது, ஏப்பா, சாகாபு.
48காலேபின் மறுமனைவி மாக்கா செபேரையும் திர்கனாவையும் பெற்றெடுத்தார்.
49மேலும், அவர் மத்மன்னாவின் தந்தை சாகாபையும் மக்பேனாவிற்கும் கிபயாவிற்கும் தந்தையான செவாவையும் பெற்றெடுத்தார்; காலேபின் புதல்வி அக்சா.
50இவர்களே காலேபின் புதல்வர்கள்: எப்ராத்தாவின் தலைமகனான கூரின் புதல்வர்: கிரியத்து எயாரிமின் மூதாதையான சோபால்.
51பெத்லகேமின் மூதாதையான சல்மா, பெத்காதேரின் மூதாதையான ஆரேபு.
52கிரியத்து எயாரிமின் மூதாதையாகிய சோபாலின் மற்ற புதல்வர்: ஆரோவே, ஆட்சி மெனுகோத்து.
53கிரியத்து எயாரிமின் குடும்பங்கள்: இத்திரியர், பூத்தியர், சுமாத்தியர், மிஸ்ராவியர், இவர்களிடமிருந்து சோராத்தியரும் எஸ்தாவோலியரும் தோன்றினர்.
54சல்மாவின் புதல்வர்: பெத்லகேமியர், நெற்றோபாயர், அற்றரோத் பெத்யோவாபு, மானகத்தியரிலும் பாதி மக்களான சோரியர்.
55யாபேத்தில் குடியிருந்த எழுத்தரின் குடும்பங்கள்: திராத்தியர், சிமயாத்தியர், சூக்காத்தியர்; இரேக்கபு வீட்டாரின் மூதாதையான அமாத்திலிருந்து தோன்றிய கேனியர் அவர்களே.
2:7 யோசு 7:1.