பழைய ஏற்பாடு
 தொடக்கநூல்

 விடுதலைப்பயணம்
 லேவியர்
 எண்ணிக்கை
 இணைச்சட்டம்
 யோசுவா
 நீதித்தலைவர்கள்
 ரூத்து
 சாமுவேல் - I
 சாமுவேல் - II
 அரசர்கள் - I
 அரசர்கள்  - II
 குறிப்பேடு - I
 குறிப்பேடு - II
  எஸ்ரா
 நெகேமியா
 எஸ்தர்
 யோபு
 திருப்பாடல்கள்
 நீதிமொழிகள்
 சபைஉரையாளர்
 இனிமைமிகுபாடல்  
 எசாயா
 எரேமியா
 புலம்பல்
 எசேக்கியல்
 தானியேல்
 ஒசேயா
 யோவேல்
 ஆமோஸ்
 ஓபதியா
 யோனா
 மீக்கா
 நாகூம்
 அபக்கூக்கு
 செப்பனியா
 ஆகாய்
 செக்கரியா
 மலாக்கி

:: இணைத்திருமுறை நூல்கள் ::

 தோபித்து
 யூதித்து
 எஸ்தர்(கி)
 சாலமோனின்ஞானம்
 சீராக்கின் ஞானம்
 பாரூக்கு
 தானியேல் (இ)
 மக்கபேயர் - I
 மக்கபேயர் - II

 
 
Previous Chapter
List all
List all List all List all Search  
 
Next Chapter
Next Chapter
 
Example: To input அன்பு type anbu or to input ஆண்டவரே type ANdavarE
 
 
 
 

நாகூம்

முன்னுரை

இஸ்ரயேலின் மிகப் பழைய, கொடிய எதிரியான அசீரியருடைய தலைநகராம் நினிவே பெருநகரின் வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ந்து பாடும் கவிதையாக "நாகூம்" என்னும் இந்நூல் அமைந்துள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நினிவே அழிவுற்றது. ஆணவம் கொண்டு மற்ற மக்களைக் கொடுமைப்படுத்தும் எந்த நாட்டையும் ஆண்டவர் தண்டிக்காமல் விடமாட்டார் என்பதை இந்நூல் விளக்குகிறது.

நூலின் பிரிவுகள்
  1. நினிவேயின் மீது ஆண்டவரின் தீர்ப்பு 1:1 - 15
  2. நினிவேயின் வீழ்ச்சி 2:1 - 3:19


அதிகாரம் 1
1 நினிவேயைக் குறித்த இறைவாக்கு: எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல். 2 ஆண்டவர் அநீதியைப் பொறாத இறைவன்: பழிவாங்குபவர்: ஆண்டவர் பழிவாங்குபவர்: வெகுண்டெழுபவர்: தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்: தம் பகைவர்மீது சினம் கொள்பவர்.3 ஆண்டவர் விரைவில் சினம் கொள்ளார்: ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் பழிவாங்காமல் விடமாட்டார். சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி: மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்!4 அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார்: ஆறுகளையெல்லாம் வற்றிப்போகச் செய்கின்றார்: பாசானும் கர்மேலும் காய்ந்து போகின்றன: லெபனோனின் மலர்கள் வாடிப்போகின்றன.5 அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன: குன்றுகள் கரைகின்றன: நிலமும் உலகும் அதில் குடியிருக்கும் அனைத்தும் அவர் முன்னிலையில் நடுநடுங்கின்றன.6 அவரது கடும் சினத்தை எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் முன் நிற்பவன் யார்? தீயைப்போல் அவரது கோபம் கொட்டுகின்றது: பாறைகளும் அவர்முன் தவிடு பொடியாகின்றன.7 ஆண்டவர் நல்லவர்: துன்பநாளில் அவர் காவலரண் ஆவார்: அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார்.8 தம் எதிரிகளைப் பொங்கியெழும் வெள்ளத்தின் நடுவே முற்றிலும் அழித்திடுவார்: தம் பகைவர்களை இருளுக்குள் விரட்டியடிப்பார்.9 ஆண்டவரைப்பற்றி நீங்கள் நினைப்பது என்ன? அவர் முற்றிலும் அழித்துவிடுவார்: தீமை மீண்டும் தலைதூக்காது.10 குடிவெறியில் மயங்கிக் கிடக்கும் அவர்கள் பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும் காய்ந்த சருகுபோலும் முற்றிலும் எரிந்துபோவார்கள்.11 ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டித் தீய ஆலோசனைகளைக் கூறுபவன் உன்னிடமிருந்து தோன்றினான்.12 ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்கள் வல்லவர்களாயினும் பெரும் தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்துவிடுவார்கள்: உன்னை நான் இதுவரை துன்புறுத்தியிருந்தாலும் இனிமேல் உன்னைத் துன்புறுத்தமாட்டேன.13 இப்பொழுதே, உன்மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை நான் அறுத்துவிடுவேன்.14 ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட திர்ப்பு இதுவே: உன் பெயரைத்தாங்கும் வழிமரபே இல்லாமல் போகும்: உன் தெய்வங்களின் கோவிலில் உள்ள செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன். நானே உனக்கு அங்குப் புதை குழி வெட்டுவேன்: ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.15 வெற்றி! வெற்றி! என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்: அவன் முற்றிலும் அழிந்து விட்டான்.



Subscribe to arulvakku
Powered by groups.yahoo.com
 
புதிய ஏற்பாடு
 மத்தேயு நற்செய்தி
 மாற்கு நற்செய்தி
 லூக்கா நற்செய்தி
 யோவான் நற்செய்தி
 திருத்தூதர் பணிகள்
 உரோமையர்
 கொரிந்தியர் I
 கொரிந்தியர் II
 கலாத்தியர்
 எபேசியர்
 பிலிப்பியர்
 கொலோசையர்
 தெசலோனிக்கர் I
 தெசலோனிக்கர் II
 திமொத்தேயு I
 திமொத்தேயு II
தீத்து
 பிலமோன்
 எபிரேயர்
 யாக்கோபு
 பேதுரு I
 பேதுரு II
 யோவான் I
 யோவான் II
 யோவான் III
 யூதா
 திருவெளிப்பாடு
உரிமை © 2004-2008 அருள்வாக்கு.காம் Share