பழைய ஏற்பாடு
 தொடக்கநூல்

 விடுதலைப்பயணம்
 லேவியர்
 எண்ணிக்கை
 இணைச்சட்டம்
 யோசுவா
 நீதித்தலைவர்கள்
 ரூத்து
 சாமுவேல் - I
 சாமுவேல் - II
 அரசர்கள் - I
 அரசர்கள்  - II
 குறிப்பேடு - I
 குறிப்பேடு - II
  எஸ்ரா
 நெகேமியா
 எஸ்தர்
 யோபு
 திருப்பாடல்கள்
 நீதிமொழிகள்
 சபைஉரையாளர்
 இனிமைமிகுபாடல்  
 எசாயா
 எரேமியா
 புலம்பல்
 எசேக்கியல்
 தானியேல்
 ஒசேயா
 யோவேல்
 ஆமோஸ்
 ஓபதியா
 யோனா
 மீக்கா
 நாகூம்
 அபக்கூக்கு
 செப்பனியா
 ஆகாய்
 செக்கரியா
 மலாக்கி

:: இணைத்திருமுறை நூல்கள் ::

 தோபித்து
 யூதித்து
 எஸ்தர்(கி)
 சாலமோனின்ஞானம்
 சீராக்கின் ஞானம்
 பாரூக்கு
 தானியேல் (இ)
 மக்கபேயர் - I
 மக்கபேயர் - II

 
 
Previous Chapter
List all
List all List all List all Search  
 
Next Chapter
Next Chapter
 
Example: To input அன்பு type anbu or to input ஆண்டவரே type ANdavarE
 
 
 
 

ஆமோஸ்

முன்னுரை

விவிலியத்தில் இடம் பெறும் இறைவாக்குகளுள், ஆமோஸ் உரைத்த தூதரையே முதலில் எழுத்து வடிவம் பெற்றதாகும். ஆமோஸ் தென்னாடான யூதாவில் பிறந்தவராயினும் வடநாடான இஸ்ரயேலுக்குச் சென்று கி.மு. 8-ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இறைவாக்கு உரைத்தார். அந்நாளில் அந்நாடு சீரும் சிறப்புமாய் இருந்தது. ஆனால் வளமும் வாழ்வும் செல்வருக்கும் வலியோருக்கும் மட்டுமே; ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்தனர்.

வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் அநீதியும் பொய்ம்மையும் நிறைந்த சமுதாயத்தைக் கண்டு சீறுகிறார் ஆமோஸ். இனம் இனத்தையும் மனிதர் மனிதரையும் கசக்கிப் பிழியும் கொடுமையைக் கடுமையாய்க் கண்டிக்கிறார். நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொண்டாலன்றி, எந்த இனமும் கடவுளின் கடும் தண்டனைக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.

நூலின் பிரிவுகள்
  1. வேற்றினத்தார் மீது இறைவனின் தீர்ப்பு 1:1 - 2:5
  2. இஸ்ரயேல் மீது இறைவனின் தீர்ப்பு 2:6 - 6:14
  3. ஐந்து காட்சிகள் 7:1 - 9:15


அதிகாரம் 1
1 தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு: 2 சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் முழுங்குகின்றார்: இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் தீய்ந்து போகின்றன: கர்மேல் மலையின் உச்சியும் காய்ந்து போகின்றது3 ஆண்டவர் கூறுவது இதுவே: தமஸ்கு நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக, நான் கொடுத்த தண்டனைத் திர்ப்பை மாற்றவே மாட்டேன். ஏனெனில், அவர்கள் கிலயாதை இரும்புக் கருவிகளைக் கொண்டு போராடித்தார்கள்.4 ஆதலால் அசாயேல் வீட்டின்மேல் தீ மூளச் செய்வேன். அது பெனதாது கோட்டைகளை விழுங்கிவிடும்.5 தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன். பிக்காத்தாவேனில் குடியிருப்பவர்களையும் பெத்ஏதேனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன். ஆராமின் மக்கள் கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்கிறார் ஆண்டவர்.6 ஆண்டவர் கூறுவது இதுவே: காசா நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன். அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்:7 ஆதலால் காசாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.8 அஸ்தோதில் குடியிருப்பவர்களையும் அஸ்கலோனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்: எக்ரோனுக்கு எதிராக என் கையை ஓங்குவேன்: பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும் அழிந்திடுவர் என்கிறார் ஆண்டவராகிய என் தலைவர்.9 ஆண்டவர் கூறுவுது இதுவே: தீர் நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்: சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை.10 ஆதலால் தீரின் கோட்டை மதில்கள் மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.11 ஆண்டவர் கூறுவது இதுவே: ஏதோம் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் உறவுமுறையின் கடமைகளை மீறி வாளேந்தித் தன் சகோதரனையே துரத்தினான்: தன் ஆத்திரத்தை அடக்கி வைக்காமல் என்றென்றும் கோபத்தைக் காட்டி வந்தான்:12 ஆதலால் தேமான்மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது பொட்சராவின் கோட்டைகளை விழுங்கிவிடும்.13 ஆண்டவர் கூறுவது இதுவே: அம்மோன் மக்கள் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகக் கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழத்தார்கள்.14 ஆதலால், இராபாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கி விடும்: அப்பொழுது, போர்க்காலத்தின் பேரிரைச்சலும், சூறாவளி நாளின் கடும் புயலும் இருக்கும்.15 அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான். அவனோடு அதிகாரிகளும் கொண்டு போகப்படுவார்கள் என்கிறார் ஆண்டவர்.



Subscribe to arulvakku
Powered by groups.yahoo.com
 
புதிய ஏற்பாடு
 மத்தேயு நற்செய்தி
 மாற்கு நற்செய்தி
 லூக்கா நற்செய்தி
 யோவான் நற்செய்தி
 திருத்தூதர் பணிகள்
 உரோமையர்
 கொரிந்தியர் I
 கொரிந்தியர் II
 கலாத்தியர்
 எபேசியர்
 பிலிப்பியர்
 கொலோசையர்
 தெசலோனிக்கர் I
 தெசலோனிக்கர் II
 திமொத்தேயு I
 திமொத்தேயு II
தீத்து
 பிலமோன்
 எபிரேயர்
 யாக்கோபு
 பேதுரு I
 பேதுரு II
 யோவான் I
 யோவான் II
 யோவான் III
 யூதா
 திருவெளிப்பாடு
உரிமை © 2004-2008 அருள்வாக்கு.காம் Share