முகப்பு
 திருவிவிலியம்
 நாட்காட்டி
 கைபேசியில்
 ஒலி, ஒளி
 வெளியீடுகள்
 உங்கள் கருத்து
 விருந்தினர் பதிவு
 தவற்றைச் சுட்ட
 எம்மை இணைக்க
 எம்மைப் பற்றி
 தொடர்புக்கு
 

 
 

  எம்மைப் பற்றி

 

தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி. (உரோமையர் :15:16)

அருள்வாக்கு – தமிழ் கூறும் நல்லுலகில் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்ற, நவீன உலகின் தொடர்பு சாதனங்களான கணினி, இணையம், கைபேசி போன்றவைகளை கருவிகளாக்கும் உன்னத முதல் முயற்சி.

அருள்வாக்கு – திருவிவிலிய கணினி மென்பொருள். புதிய மொழிபெயர்ப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. எல்லா செயலிகளிலும் பயன்படுத்தலாம். திருவிவிலியத்தில் வசனங்களையோ, வார்த்தைகளையோ எளிதாக தேடலாம்.

அருள்வாக்கு GoBible – கைபேசியில் திருவிவிலியம். பயணங்களில் கைபேசியின் உதவிக்கொண்டு திருவிவிலியம் வாசிக்கலாம். எளிதாக வசனங்களைத் தேடவும், தேடியப் பக்கங்களை சேமிக்கவும், குறுந்தகவல் அனுப்பலாம்.

அருள்வாக்கு.காம் - திருவிவிலியத்திற்கான இணையத்தளம். உலகளாவிய தமிழ் கிறித்தவர்களை ஒருங்கிணைக்கும் பாலம். தமிழில் விவிலியத்தை வாசிக்க, திருப்பலி மற்றும் பாடல்களைக் கேட்க, கிறித்தவ ஒலி, ஒளி காட்சிகளைக் கண்டு தியானிக்கலாம்.

அருள்வாக்கு.காம் (m.arulvakku.com from your mobile browser) – கைபேசியிலே இணையத்தின் தொடர்பு மூலம் திருவிவிலியம் எளிதாக வாசிக்கவும், வசனங்களைத் தேடவும் எளிதாக்கப்பட்ட இணையத்தளம்.

அருள்வாக்கு குறுந்தகவல் (SMS) - தினமும் அன்றைய திருப்பலி வாசக குறிப்புகளையும், நற்செய்தி வாசகத்தில் ஒரு வசனத்தையும் தாங்கி வரும் குறுந்தகவல் சேவை.

அருள்வாக்கு குழு மின்னஞ்சல் - நற்செய்தியை அறிவிக்கவும், சிந்தனைகளை பகிரவும், உலகம் முழுவதும் பரவி விரிந்து வாழும் தமிழ் கிறித்தவர்களுக்கான மின்னஞ்சல் குழு.

இ-பங்கு (e-parish) – கிறித்தவ தல திருச்சபையாகிய பங்கு மேலாண்மை மென்பொருள். குடும்ப கணக்குகள், அன்பியங்கள், பங்கு நிகழ்வுகள், திருமுழுக்கு, திருமண மற்றும் அருட்சாதன தகவல் சேமிப்புகள், பங்கு நிதி மேலாண்மை.

Google Groups
Subscribe to Arulvakku Group Emails
Email:
Visit this group
 

  NEWS

உரிமை © 2004-2012 அருள்வாக்கு.காம்:: Share