279. கனிவோடு ஏற்பாய் என் இறைவா

கனிவோடு ஏற்பாய் என் இறைவா
மகிழ்வோடு தரும் எம் காணிக்கையை
மணம் கமழும் மலரெடுத்து பூமாலை நான் தொடுத்து
நிதம் உந்தன் பாதம் படைத்திடுவேன் அருள்மிகு பரம்பொருளே
தாகம் தீர்ந்திடவும் பாவம் போக்கிடவும் அப்பரசத்தை நீர் தந்தீர்
அன்பு வழியிலே நாளும் சென்றிட அருளமுதாய் நீர் வந்தீர் (2) இறைமகனே என் இனியவனே துணையவனே என் காவலனே
என் மனக்குறை நீங்கிட மகிழ்வினில் வாழ்ந்திட
ஏழை பெண்ணெருத்தி அளித்த காணிக்கையை
மிகவும் உயர்ந்ததென்று மொழிந்தீர்
பகிர்ந்து வாழ்தலே சிறந்த வாழ்வு என்று
வாழ்ந்து காட்டியே சென்றீர் (2) இறைமகனே

பாடல் பிரிவுகள்

You may use the above contents freely for worship and with no commercial interest. We would appreciate if you acknowledge this website.

Copyright © 2010 அருள்வாக்கு