1.001 அணி அணியாய் வாருங்கள்

பாடல் :

  அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
  ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே (2)

  அன்புப்பணியாலே உலகை வெல்லுங்கள்
  இன்ப துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2)
  எளியவர் வாழ்வில் துணைநின்று
  இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)

  மண்ணகத்தில் பொருளை சேர்க்க வேண்டாம்
  மறைந்து ஒழிந்து போய்விடுமே (2)
  விண்ணில் பொருளை தினம் சேர்த்து
  இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)

1.002 அமைதி தேடி அலையும் நெஞ்சமே

பாடல் :
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் – 2
அவரின்றி வேறில்லையே

  போற்றுவேன் என் தேவனே பறைசாற்றுவேன் என் நாதனே
  எந்நாளுமே என் வாழ்விலே (2)
  காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
  நாடுதே அது தேடுதே (2)

  இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
  என் தேவனே என் தலைவனே (2)
  பரந்து விரிந்த உலகம் படைத்த சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட
  தேவனே என் ஜீவனே (2)

1.003 அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

பாடல் :

  அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
  ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம் (2)
  அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
  ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் (2)

  தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
  அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே
  பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும்
  அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
  மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
  பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
  அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்

  உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
  உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
  உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
  உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
  அழித்து ஒழித்துக் கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர்
  கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்
  அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்

1.004 அருட்கரம் தேடி

பாடல் :
அருட்கரம் தேடி உன் ஆலய பீடம் அலைஅலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் (2)

  ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
  ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை (2)
  மூழ்கிடும் வேளையில் எம் தலைவா
  உம் கரம்தானே எம்மை கரைசேர்க்கும்
  பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளி இருக்க (2)
  நாளுமே எம்மை காத்திடும் உந்தன்

  ஆறுதல் தேடும் இதயங்களோ அன்பினைத் தேடி அலைகின்றது (2)
  ஏற்றிட விரையும் எம் தலைவா – உம்
  தெய்வீக கரம்தானே எமை தேற்றும்
  கொடும் பிணியோ வரும் பிரிவோ துயர் தருமோ துணை இருக்க (2)
  நாளுமே அன்பாய் காத்திடும் உந்தன்

1.005 அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

பாடல் :
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே

  தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
  தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
  சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
  வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2)
  வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
  வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

  அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
  அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
  விடியலின் கீதமாக முழங்குவார்
  விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2) வாருங்கள் … …

1.006 அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு

பாடல் :

அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு
அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள் (2)
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே – 2
படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்

  பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
  பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் (2)
  அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே – 2
  படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்
  வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
  வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் (2)
  நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே – 2
  இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்

1.007 அற்புத அன்பனின் அடிதொழவே

பாடல் :

அற்புத அன்பனின் அடிதொழவே
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே
இயேசுவை வணங்கிடுமே (2)

  ஆலயமணியின் ஓசையைக் கேட்போம்
  ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் (2)
  ஆவியின் அருளால் அறவழி நடப்போம்
  அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் (2)
  அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்
  ஆனந்தமாய் வாழ்வோம் (நாம்) – (2)

  ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்
  ஆண்டவன் சந்நிதி வணங்கியே நின்றோம் (2)
  அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
  அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் (2) அன்பினில் … …

1.008 அன்பின் திருக்குலமே இறை இயேசுவின்

பாடல் :

அன்பின் திருக்குலமே இறை இயேசுவின்
எழுவோம் ஒரு மனதாய் கூடித் தொழுவோம் புகழ்ப் பலியாய்
இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்
மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம்

  இருளின் ஆட்சியை முறியடிக்க
  அன்று நிகழ்ந்த பலியை நினைப்போம்
  இறைவன் மைந்தனே பலிப்பொருளாய்
  தன்னை இழந்த தியாகம் உரைப்போம் (2)
  சுயநலம் மறைய சமத்துவம் வளர
  அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம்
  இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் – இந்த
  இனிய பலியில் இணைவோம்
  உறவு விருந்தினை பரிமாறும்
  திருவிருந்து பகிர்வில் மகிழ்வோம் (2)
  வலிமையில் வளர வாஞ்சையில் திகழ
  வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்

1.009 அன்பின் விழுதுகள் படர்ந்திடவே

பாடல் :

  அன்பின் விழுதுகள் படர்ந்திடவே
  மனித மாண்புகள் உயிர்த்திட
  மனச் சிறையின் கதவுகள் உடைந்திடவே
  இறை உணர்வுகள் வாழட்டும் – 2 (2)
  வழிபாட்டில் காணும் உணர்வுகள் நம்
  வாழ்வில் நதியாய்ப் பாயட்டும்
  வேதத்தில் காணும் பண்புகள் நம்
  மனதில் வாழ்வாய் அமையட்டும் (2)
  புதிய பாதையில் தொடர்ந்து புதுயுகம் நாம் படைப்போம்
  இனி வரும் நாளில் புது வாழ்வில் இறைஇன்பம் காண்போம்
  வார்த்தைகள் பேசும் உண்மைகள் நம்
  இதயத்தில் உயிராய் வாழட்டும்
  உரிமையில் பூத்த உறவுகள் புதுக்
  கவிதைகள் பாடி மகிழட்டும் (2) – புதிய பாதையில் … …

1.010 அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

பாடல் :

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள்ஒளி வீசும் ஒரு வழி போவோம் (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2
பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம்

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் நம்மை
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை (2)
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2
பிறரையும் நமைப் போல் நினைத்திட வேண்டும்

1.011 அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்

பாடல் :

அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்
இறைவன் அழைப்பை ஏற்று அவரில் மகிழுங்கள் இறையரசின்
இயேசுவில் நாமும் வாழ்ந்திட வேண்டும்

  அவரின் பாதையிலே நாம் நடந்திட வேண்டும் (2)
  பாவம் போக்கிட வேண்டும் கோபம் நீக்கிட வேண்டும்
  என்றும் – அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் – 2

  ஆவியின் வரங்கள் நாம் பெற வேண்டும்
  அவரின் ஆற்றலோடு பணிபுரிய வேண்டும் (2)
  மனிதம் மலர்ந்திட வேண்டும் புனிதம் அடைந்திட வேண்டும்
  அதனால் – இடைவிடாது நாம் செபிக்க வேண்டும் – 2

1.012 அன்பைக் கொண்டாடுவோம் இறை அன்பில்

பாடல் :

  அன்பைக் கொண்டாடுவோம் இறை அன்பில் ஒன்றாகுவோம்
  இந்த உலகில் மனிதநலம் மலர்ந்து மாண்படைய
  பண்போடு நாம் வாழுவோம் நிறைவாழ்வை நாம் காணுவோம்(2)
  பகைமை உணர்வுகளை நாம் களைந்து
  பாசத்தைப் பொழிந்தே வாழுவோம் (2)
  வேற்றுமை நிலைகளை மதித்திங்கு
  ஒற்றுமையுடனே பழகுவோம்
  அன்பிற்கு இலக்கணமாகிடவே
  அன்றாடம் உறவுகள் வளர்ந்திடவே
  ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
  இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்
  பாகுபாடுகளை நாம் வெறுத்து
  பகிர்விலே சமத்துவம் காணுவோம் (2)
  பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு
  பிறரையும் நேசிக்கத் துவங்குவோம்
  உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே
  உலகெல்லாம் நிறையன்பு துலங்கிடவே – ஒன்று சேர்வோம்…..

1.013 ஆண்டவர் அவையினில் பாடுங்களே

பாடல் :

ஆண்டவர் அவையினில் பாடுங்களே நல்ல
ஆனந்த கீதங்களே நல்ல ஆனந்த கீதங்களே

  இதயங்கள் இன்னொலி எழுப்பிடுமே நம்
  அவயங்கள் அருளிசை பாடிடுமே (2)
  நினைவினில் கீதங்கள் சுழன்றிடுமே ஆ… – 2
  அனைவரின் அன்பனை வாழ்த்திடவே
  மனமென்னும் கோயிலில் தோரணங்கள் – நம்
  மகிழ்ச்சியைப் பரப்பிடும் மணியொலிகள் (2)
  இதயத்தின் எழுச்சியே தூபப்புகை ஆ. 2
  இதயத்தின் அன்பனை வணங்கிடவே

1.014 ஆண்டவர் சந்நிதி வாருங்களே

பாடல் :

ஆண்டவர் சந்நிதி வாருங்களே
ஆனந்தமுடனே பாடுங்களே (2)
இயேசுவின் நினைவில் மகிழுங்களே- 2 இந்த
இகமதில் நாளும் முழுங்குங்களே வாருங்களே- 4

  உள்ளங்கள் மகிழும் உறவுகள் மலரும்
  இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால்
  அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால்
  ஆண்டவர் வழியினில் நடந்திடலாம்
  குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால்
  இயேசுவை அவரில் கண்டிடலாம் (2)
  இறைப்பணி தொடர இறையாட்சி மலர
  இணைந்திடுவோம் நாம் இறைவனிலே (2)
  சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை
  இறைவன் இயேசு வருகையிலே
  நீதியும் உண்டு சமத்துவம் உண்டு
  இறைவன் வாழும் சமூகத்திலே
  அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால்
  இனிய உலகம் படைத்திடலாம் (2)
  குழந்தை இயேசு உள்ளத்தில் பிறந்தால்
  புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம் (2)

1.015 ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம்

பாடல் :

ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம்
அவரின் பாதைகளை செம்மையாய் ஆக்குவோம் (2)
செல்லுவோம் – 2 அவர் வழியில் நாம் செல்லுவோம் (2)

  பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவச் செய்வோம்
  மலைகள் குன்றுகளெல்லாம் தாழ்த்தி வைப்போம் (2)
  கோணலானவற்றை நேராக ஆக்குவோம் – 2
  கரடுமுரடானவற்றை சமமாக்கி வழிநடப்போம்
  மனிதரெல்லாம் தமது மீட்பைக் காண
  கடவுள் வந்துவிட்டார் நம்மைக் கண்டுவிட்டார் (2)
  மனம் திரும்புவோம் நற்செய்தி நம்புவோம் -2
  விண்ணரசு நெருங்கி விட்டது நம்மிடை வந்துவிட்டது

1.016 ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே

பாடல் :

ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே
மகிழ்வுடன் அவரை ஆராதிப்போம்
மங்கள கீதங்கள் முழங்கிடுவோம் (2)
அவரே தேவன் என்றறிவோம் அவரே நம்மைப் படைத்தாரே

  நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
  நாமே அவரது பெருமக்களாம் (2)
  துதிப் புகழோடு நுழைந்திடுவோம் தூய அவரது வாசல்களில்
  தேவனின் திருப்பெயர் தோத்தரிப்போம்
  தேவனின் நன்மைகள் சாற்றிடுவோம் (2)
  தேவனின் கிருபை உண்மையுமே
  தலைமுறை தலைமுறை நீடிக்குமே

1.017 ஆண்டவரே உன் இல்லம் வருகிறேன்

பாடல் :

ஆலேலூயா – 5 (2)
வருகிறேன் வருகிறேன் உன் இல்லம் தேடி வருகிறேன்
வருகிறேன் வருகிறேன் உன் அன்பைப் பாடி வருகிறேன் (2)

  ஆண்டவரே உன் இல்லம் வருகிறேன் – 2
  அடைக்கலம் நாடி உன் பீடம் வருகிறேன் தொழுகிறேன் – 2 (2)
  உன் வழி நடந்திட செபிக்க வருகிறேன்
  வியத்தகு செயல்களை எண்ணி வியக்கிறேன்
  தாயின் கருவில் எனைத் தேர்ந்து கொண்டாய்
  கரங்கள் பிடித்து எனை அழைத்து வந்தாய்
  இறைவா என் இறைவா என் ஆதாரம் நீயாகவா
  இமைகள் போல எனைக் காத்து நின்றாய்
  உன் கரத்தில் என் பெயரைப் பொறித்து வைத்தாய்
  இருளைப் பழிக்காமல் ஒளி ஏற்ற – என்
  இதயம் கலங்காமல் உறவாட உன் ஒளியினில் கலந்திடுவேன்
  நானோ சிறுவனென்று விலகி நின்றேன்
  ஏதும் அறியேனென்று தயங்கி நின்றேன்
  இறைவா என் இறைவா என் நல்லாயன் நீயாக வா
  உமது வார்த்தைகளைப் பேசப் பணித்தாய்
  உமது பணிக்கு எனைத் தேர்ந்து கொண்டாய்
  கடமை மறவாது பணி செய்ய என்
  கனவு நனவாக தினம் உழைக்க உன் உறவினில் கலந்திடுவேன்

1.018 ஆலயத்தில் நாம் நுழைகையிலே

ஆலயத்தில் நாம் நுழைகையிலே
புது நினைவுகள் எழுகின்றன
அந்த நினைவுகளின் புது வருகையிலே
நம் நெஞ்சங்கள் நிறைகின்றன (2)

  அன்பான மகனைப் பலிகொடுத்த
  ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2)
  பண்பான ஆட்டினைப் பலியீந்த ஆபேலும் இங்கே தெரிகின்றார்
  எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
  இயேசுவும் அங்கே மொழிந்தாரே (2)
  என் வீடு இது செப வீடு வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்

1.019 ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே

பாடல் :

ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே
ஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே
மனத்தாங்கல்களோடு அல்ல மனமாற்றங்களோடு செல்ல -2
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்

  வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே
  வார்த்தையை வாழ்வாய் அமைத்திடுவோம்
  நிறைவாய் பெறுவதே அருளென்போம்
  இருப்பதைப் பகிர்வதே சமமென்போம்
  நல்வாழ்வே ஆன்மீக வழிபாடு -2
  இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு
  இறைவார்த்தை நெறியே உண்மை வழி
  இதயத்தைத் தேற்றும் இன்ப மொழி
  தன்னையே தருகின்ற தலைவன் வழி
  பகிர்வில் உயர்வு காணும் நெறி
  இந்த உண்மையை நாளும் உணர்ந்திடவே -2
  இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு

1.020 ஆவியிலும் என்றும் உண்மையிலும் வழிபட வாருங்கள்

ஆவியிலும் என்றும் உண்மையிலும் வழிபட வாருங்கள்
இந்த அவனியில் இறைவன் அரசினைக் காணும்
ஆனந்தம் பாருங்கள்

  உலகின் மாந்தர்களே உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள்
  இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்
  இகம் வாழ்ந்திடும் முறை கேளுங்கள்
  உலகின் மாந்தர்களே உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள்
  வறியோருக்கு வழிகாட்டுங்கள் வளம்பொங்கிட வகைகூறுங்கள்

1.021 ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே

பாடல் :

ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆண்டவர் இல்லம் செல்வோம் (2)
என்றும் அவனியில் மாந்தர் அன்பினில் மிளிர
அருள் வேண்டி பலியிடுவோம்

  உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை
  ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் (2)
  கானமும் காற்றும் வேறில்லையே – 2
  நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே வேறில்லையே
  விடியலின் பனித்துளி மிதிபடவே – உம்
  விடியலின் கனவை யாம் கண்டிடனும் (2)
  மனதினைக் காக்கும் மாண்புடனே (2)
  மனங்களைப் பலியிட வருகின்றோம் வருகின்றோம்

1.022 ஆனந்த கீதங்டகள் முழங்கிட எமுவோம்

பாடல் :

ஆனந்த கீதங்டகள் முழங்கிட எமுவோம்
ஆண்டவர் ஆலயம் நுழைந்திடுவோம்
வாருங்கள் வாருங்கள் வாழ்த்திடுவோம்
வான்புகழ் இன்னிசை இசைத்திடுவோம்

  விடியலின் வேள்விகள் படைத்திடவே
  விடுதலை வாழ்வினைப் பகிர்ந்திடவே (2)
  வாழ்த்திடு இறைகுலமே வணங்கிடு இறைவனையே
  புகழ்ந்திடு பலியினிலே வளர்ந்திடு அன்பினிலே
  இறைவனைத் தேடிடும் உறவுகளே
  இறைவழி வாழ்ந்திட வாருங்களே (2)
  சமத்துவ உறவினிலே சங்கமம் ஆகிடவே
  உரிமைகள் அடைந்திடவே உறவினில் இணைந்திடவே

1.023 ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும்

பாடல் :

ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும்
ஆவியின் கொடைகள் அனைத்தும் அகிலத்தை நிரப்ப வேண்டும்
மானிட நேயங்கள் மண்ணில் மலர வேண்டும் (இந்த) 2

  விசுவாசம் அன்பு நம்பிக்கை என்னும்
  கடவுளின் கொடைகளில் – அதில்
  அன்பொன்று மட்டும் இறைவனின் வழியில் அகிலத்தை ஆளுமே

   விண்ணவரின் அன்பின் அரசு
   மண்ணவரில் நிலைக்க வேண்டும் (2)
   புனித பூபாளம் இசைத்திட இணைவோம்
   வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம் – 2
  சாதிகள் மறைந்து பேதங்கள் ஒழிந்து நம்பிக்கையில் நிலைத்திட
  பிறர் குறைகளை மறந்து குற்றங்களை மன்னித்து
  சமத்துவம் காணுவோம் – விண்ணவரின் … …

1.024 இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

பாடல் :

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே
இணைவோம் இயேசுவின் பலியினிலே (2)
கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்
மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

  மூவொரு கடவுளர் முடிவில்லா பிரசன்னம்
  குடும்பமாய் இணைக்கின்றது
  நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது (2)
  பலியினில் கலந்து உறவினில் இணைய
  நம்மையே அழைக்கின்றது
  இன்று நம்மையே அழைக்கின்றது – கூடிடுவோம் …
  இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க
  பாதை காட்டுகின்றது – புதிய பாதை காட்டுகின்றது (2)
  சோதனை வென்று சாதனை படைக்க
  ஆற்றல் தருகின்றது நமக்கு ஆற்றல் தருகின்றது
  கூடிடுவோம் …

1.025 இணையில்லா இறைவனின் திருப்புகழை

இணையில்லா இறைவனின் திருப்புகழை
அனைவரும் இணைந்தே பாடிடுவோம் (2)

  அருள் நிறை ஆயன் அக்களித்து
  ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்து (2)
  பரம்பொருள் அவன் பாதம் தனையே நாம்
  பரிவுடன் போற்றி வாழ்ந்திடுவோம் (2)
  வானுற உயர்ந்த மலைகளுமே
  வண்ண எழில் நிறை மலர்களுமே (2)
  உனைத் தேடும் சின்ன உயிர்களுமே நிதம்
  உன்னத இறைவனை வாழ்த்திடுமே (2)

பாடல் பிரிவுகள்

You may use the above contents freely for worship and with no commercial interest. We would appreciate if you acknowledge this website.

Copyright © 2010 அருள்வாக்கு