ஒபதியா முன்னுரை


இறைவாக்கு நூல்களிலேயே மிகச் சிறியதான இந்நூல் கி.மு.586இல் எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்ததற்குச் சற்றுப் பின்னர் தோன்றியதாகும். எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டு யூதாவின் பழம்பெரும் எதிரியான ஏதோம் நாடு அக்களித்தது. அத்தோடு நில்லாமல் அது யூதாவில் புகுந்து கொள்ளையடித்து, பிற எதிரிகளும் அதனுள் நுழையத் துணை நின்றது. எனவே இஸ்ரயேலின் எதிரிகளான மற்றெல்லா இனத்தோடும் ஏதோம் நாடும் தண்டிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்படும் என்று ஒபதியா முன்னுரைக்கிறார்.

நூலின் பிரிவுகள்

  1. ஏதோமிற்கு வரும் தண்டனைத் தீர்ப்பு 1 - 14
  2. ஆண்டவரின் நாள் 15 - 21