பழங்கால இஸ்ரயேலர் தம் கடவுளின் தூய தன்மையும் அவரை வழிபடுவதற்கான முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிகளும் அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன.

‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!’ என்னும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் பெரிய கட்டளை இந்நூலில் (19:18) இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

நூலின் பிரிவுகள்

  1. காணிக்கைப் பலிகளுக்கான சட்டங்கள் 1:1 - 7:33
  2. ஆரோன், அவர்தம் புதல்வர் ஆகியோரின் திருநிலைப்பாட்டிற்கான நெறிமுறைகள் 8:1 - 10:20
  3. குருக்களின் தூய்மையும் தீட்டும் பற்றிய சட்டங்கள் 11:1 - 15:33
  4. பாவக்கழுவாய் நாள் 16:1 - 34
  5. தூய்மையான வாழ்விற்கும் வழிபாட்டிற்குமான சட்டங்கள் 17:1 - 27:34